• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நமீதா.!

October 20, 2017 tamil.samayam.com

நடிகர் சரத்பாபுவை திருமணம் செய்யப்போவதாக வந்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியடைந்து விட்டதாக நமீதா கூறியுள்ளார்.

தமிழ்சினிமாவின் கவர்ச்சி நடிகையான நமீதா, மூத்த நடிகரான சரத்பாபுவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதை மறுத்து நடிகை நமீதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தனக்கும் நடிகர் சரத்பாபுவுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்ட தகவலைக் கேட்டதுமே ஷாக் ஆகி விட்டதாக கூறியுள்ளார். மேலும், தனக்கும் தன்னை விட மூத்த நடிகருக்கும் திருமணம் செய்து கொள்வது எப்படி சாத்தியம் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த தகவலை வெளியிட்டவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் இது மிகவும் தவறான கருத்து என்று கூறிய நடிகை நமீதா, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர் சரத்பாபுவும் இது வதந்தி என ஏற்கெனெவே அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது

மேலும் படிக்க