சுவாமி : வைகுந்த பெருமாள்.
அம்பாள் : வைகுந்தவல்லி தாயார்.
தீர்த்தம் : ஐரம்மத தீர்த்தம்.
விமானம் : முகுந்த விமானம்.
தலச்சிறப்பு : இத்திருக்கோவில் மாடகோயில் வகையைச் சார்ந்தது. மூன்று நிலைகளைக் (தளங்கள்) கொண்டுள்ளது. முதல் தளத்தில், மூலவர் வைகுந்தப் பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில், மேற்குப் பார்த்த வண்ணம் எழுந்தருளி அருள்புரிந்து கொண்டுள்ளார். இரண்டாம் தளத்தில், அரங்கநாதப் பெருமாள், வடக்கே தலைவைத்து அனந்த சயன திருக்கோவில் எழுந்தருளி அருள்புரிந்து கொண்டுள்ளார். மூன்றாம் தளத்தில், பரமபதநாதர் நின்ற திருக்கோவில் எழுந்தருளிய அருள்புரிந்து கொண்டுள்ளார். இவ்வாறு பெருமாள் இருந்த, கிடந்த, நின்ற திருக்கோலங்களைக் கொண்டு மும்மாடக் கோயிலில் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார்.
தல வரலாறு : இக்கோவில் மகாவிஷ்ணுவ இருந்த, கிடந்த, நின்ற கோலங்களைக் கொண்ட மும்மாடக் கோயில். இக்கோவில் பரமேஸ்வரவர்மன் என்ற 2ஆம் நந்திவர்ம பல்லவ மன்னனால் எழுப்பப்பட்டு பரமேஸ்வர விண்ணகரம் எனப் பெயரிடப்பட்டடுள்ளது. ராஜசிம்மன் காலத்து பாணியில் கட்டப்பட்ட கற்றளி எனக் குறிப்பிப்பட்டுகிறது.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : காஞ்சிபுரம்.
கோயில் முகவரி : அருள்மிகு வைகுந்தவல்லி தாயார் உடனுறை திருப்பரமேச்சுவர விண்ணகரம் திருக்கோவில் (சிவகாஞ்சி),
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்