• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சவால் இருந்தா தானே சாதிக்க முடியும் : தினேஷ் கார்த்திக்!

October 17, 2017 tamil.samayam.com

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில், சவாலான ‘நம்பர்-4’ இடத்தில் களமிறங்க விரும்புவதாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி வரும் 22ம் தேதி துவங்குகிறது.இத்தொடருக்கான இந்திய அணியில், தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

சமீபகாலமாக உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய காரணத்தினால் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நம்பர்-4 பேட்ஸ்மேன் இடம் காலியாக உள்ளது.

இந்த இடத்தில் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 6 வீரர்களை இந்திய கேப்டன் விராட் கோலி களமிறக்கி சோதித்தார். ஆனால் யாராலும் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. ஹர்திக் பாண்டிய ஒரு சில போட்டிகளில் நான்காவது வீரராக களமிறங்கி அசத்தினார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தன்னால் அந்த இடத்தில் சாதிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க