• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோலிக்கு ’தல’ தோனி வைத்த பட்ட பெயர் தெரியுமா?

October 5, 2017 tamilsamayam.com

முன்னாள் கேப்டன் தோனி தனக்கு வைத்த பட்ட பெயர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் சமீபத்தில் இந்திய அணிக்கு அதிக வெற்றி பெற்றுத் தந்த கேப்டன்கள் வரிசையில், கோலி முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்தார்.

இந்நிலையில் இந்திய வீரர்கள் கேப்டன் கோலியை ‘சீக்கு’ என்ற செல்லப்பெயரில் அழைப்பது வழக்கம். இந்த பெயரை முன்னாள் கேப்டன் தோனி தான் கோலிக்கு வைத்துள்ளார்.

இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள கோலி கூறுகையில்,’ எனது 17வது வயதில் முடி வெட்டியதால் எனது காது முயல் குட்டி மாதிரி தூக்கிக்கொண்டு இருக்கும். அதனால் என்னை தோனி சீக்கு முயல் என கேலி செய்தார். அதுவே என் பட்ட பெயராக மாறிவிட்டது.’ என்றார்.

மேலும் படிக்க