• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘வணங்காமுடி’ படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்துள்ள அரவிந்த்சாமி!

September 7, 2017 tamilsamayam.com

நடிகர் அரவிந்த்சாமி ‘வணங்காமுடி’ படத்துக்காக தன்னுடைய உடலை சிக்ஸ்பேக்காக மாற்றியுள்ளார்.

நடிகர் அரவிந்த்சாமி மணிரத்னம் இயக்கிய ‘தளபதி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதன்பிறகு பல படங்களில் நடித்து பெண்களின் ஆசை நாயகனாக அவர் விளங்கினார். ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் பிஸ்னஸ் என்று கவனித்து வந்தார். பின்னர் ஒரு காலகட்டத்தில் முழு கவனமும் பிஸ்னஸ் பக்கம் போனது.

பின்னர் மீண்டும் அவர் ‘தனி ஒருவன்’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது அரவிந்தசாமி கோலிவுட்டில் மீண்டும் பிசியாகிவிட்டார். தற்போது அவர் நடித்துவரும் ‘சதுரங்க வேட்டை 2’ விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் செல்வா இயக்கத்தில் ‘வணங்காமுடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இவர் இந்த படத்தின் கேரக்டருக்காக தனது உடலை சிக்ஸ்பேக்காக வைக்க முடிவு செய்துள்ளாராம். இவரது வயது 47 . இந்த வயதில் சிக்ஸ்பேக் கொண்டு வருவது கடினம் என்றாலும் விடாமுயற்சியால் விரைவில் சிக்ஸ்பேக் கொண்டு வருவேன் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க