• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிஜமான பிக்பாஸ் உலகநாயகன் தான் – சுதீப்

September 1, 2017 tamilsamayam.com

பிக்பாஸை பற்றி நடிகர் கமலிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்று வில்லன் நடிகர் சுதீப் கூறியுள்ளார்.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஓவியா வெளியேறிய பின்னர் கிட்டத்தட்ட பிக்பாஸ் கோமா நிலைக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் கன்னட பிக்பாஸ் அடுத்த பாகத்தை புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

நான்கு பாகங்கள் முடிந்து ஐந்தாம் பாகத்தை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கவுள்ளனர். ஏற்கனவே முதலாம் மற்றும் நான்காம் பாக கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், தற்போது இந்த ஐந்தாம் பாகத்தையும் தொகுத்து வழங்கவுள்ளார். இவர் ‘நான் ஈ’ படத்தில் வில்லனாகவும், விஜய் நடித்த ‘புலி’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

நடிகர் சுதீப் கூறுகையில்,

“தமிழ் பிக்பாஸில் நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும், அதை கன்னட பிக்பாஸில் பயன்படுத்தவுள்ளேன்” என்றார். இந்த முறை கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல முக்கிய விஐபிக்கள் களமிறங்கவுள்ளார்களாம்.

மேலும் படிக்க