• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

​ தயங்காத விஜய் சேதுபதி, அதிா்ந்து போன மணிரத்னம்

August 31, 2017 tamilsamayam.com

தனது எதாா்த்த நடிப்பு மற்றும் அசாத்திய திறமையால் தமிழ் ரசிகா்கள் மத்தியில் குறுகிய காலத்தில் தரமான இடத்தை பிடித்துள்ள விஜய் சேதுபதி மணிரத்னத்திற்கு அளித்த பதிலில் அவா் அதிா்ந்து போயுள்ளாராம்.

கோலிவுட் திரையுலகில் இன்றைய நிலைமையில் மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்யும் பிசியான நிலைமையில் உள்ள ஒரே நடிகர் விஜய்சேதுபதி. விக்ரம் வேதா படத்தை அடுத்து புரியாத புதிர், கருப்பன், என தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படம் வெளியாக தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் திரையுலகில் உள்ள ஒவ்வொருவரின் கனவு மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த கனவும் விஜய்சேதுபதிக்கு நனவாகியது. ஆம், மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதிக்கு முக்கிய வேடம் அளிக்கப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில் விஜய்சேதுபதிக்கு மணிரத்னம் ஒரு அதிர்ச்சியை கொடுத்தாராம். புதிய படத்தில் விஜய்சேதுபதியை தவிர மேலும் மூன்று நாயகர்கள் என்று கூறி அவர்களுடைய பெயரையும் மணிரத்னம் கூறினாராம். அவர்கள் பெயரை கேட்டதும் கொஞ்சம் கூட தயங்காத, மயங்காத விஜய்சேதுபதி என்னுடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. யார் நடித்தாலும் பரவாயில்லை, நான் நடிக்கின்றேன்’ என்று கூலாக கூறினாராம். இந்த பதில் மணிரத்னத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க