• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இங்கிலாந்தின் பிரிட்டிஷ் லேபர் கட்சியின் தலைவராக மீண்டும் கெய்த் வாஸ் தேர்வு

August 16, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்தின் பிரிட்டிஷ் லேபர் கட்சியின் எம்பியாக இருந்த கெய்த் வாஸ் மீண்டும் அந்தக் கட்சியின் தலைவராக மீண்டும் பதவியேற்றுள்ளார்.

இந்திய வம்சவாளியைச் சேர்ந்த இவர் இங்கிலாந்தின் பிரிட்டிஷ் லேபர் கட்சியில் நீண்ட நாள் எம்பியாக பணியாற்றியவர்.மேலும், அந்த கட்சியின் ஒரு பிரிவான National Executive Committee யில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், அந்த கட்சியின் தலைவர் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் கெய்த் வாஸ் போட்டியிட்டார். அதே கட்சியை சேர்ந்த அஸ்கார் கான் அவரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் கெய்த் 72.2 சதவீத வாக்குகள் பெற்று அந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

“இதனை ஆண்டுகள், நான் செய்துக்கொண்டிருந்த பணியை மீண்டும் தொடர ஆவலோடு இருக்கிறேன். லேபர் கட்சி மூலம் நாட்டிற்கு பல காரியங்களை செய்ய வேண்டும். இங்கிலாந்தின் ஒவ்வொரு முக்கிய நகரங்களில் Black Asian and Ethnic Minority (BAME) பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று என்னுடைய பிரச்சாரத்தில் நான் தெரிவித்ததை நிரூபிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் இந்தியாவின் கோவா மாகணத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க