• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சத்தீஸ்கர் மாகாணத்தில் நடந்த பிரமாண்ட மலர்க்கண்காட்சி

August 15, 2017 தண்டோரா குழு

சத்தீஸ்கர் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பூக்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியை மக்கள் கண்டு ரசித்தனர்.

சத்தீஸ்கர் மாகாணத்தின் பிலாய் நகரிலுள்ள மைத்ரி பாக் என்னும் இடத்தில் பூக்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு, பலவிதமாக அலங்காரங்கள் செய்யப்பட்ட கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சத்தீஸ்கர் மாகாணத்தின் பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, அதை கண்டு களித்தனர்.

அதில் Black Lady Rose, Dutch Rose, Kashmir Rose உள்ளிட்ட சுமார் 300 வகையான ரோஜா மலர்கள் இடம்பெற்றன. அந்த ரோஜாக்களை குறித்தும் அதன் பராமரிப்பு நுட்பம் குறித்து தோட்டக்கலை ஆய்வார்கள் கேட்டறிந்தனர். சிலர் அந்த ரோஜா மலர்களை வாங்கி சென்றனர்.

அங்கு நடந்த பூச்செண்டு தயாரித்தல் மற்றும் சாலட் அலங்காரம் போட்டியில், மக்கள் தங்களுடைய படைப்பு திறன்களை காட்டினர். பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் 3டி மூலம் போடப்பட்டிருந்த அழகிய கோலங்கள் அங்கு வந்திருந்த மக்களின் கவனத்தை கவர்ந்தது.

“அந்த மலர்கள் மிகவும் அழகாக வைக்கப்பட்டும் நன்கு பராமரிக்கப்பட்டும் இருந்தது. இது போன்ற அரிய வகை பூக்களை தினமும் பார்க்க இயலாது. பூக்களை கொண்டு செய்யப்பட்டிருந்த பறவை வடிவம் கண்கவர் காட்சியாக இருந்தது. இந்த அலங்காரங்களை கிடைத்த தகவல்கள் மிகவும் உதவியாக இருந்தது” என்று அங்கு வந்திருந்த பெண்மணி தெரிவித்தார்.

“இது போன்ற அற்புதமான கோலங்களை முதல் முறையாக பார்த்தேன். 3டி நுட்பத்தை பயன்படுத்தி போடப்பட்டிருந்த கோலங்கள், ஒரு கலைஞரின் கடின உழைப்பை காட்டுகிறது” என்று அங்கு வந்திருந்த மற்றொரு பெண் தெரிவித்தார்.

மேலும் படிக்க