• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவேகம் படத்தில் 50 அடி உயர மரத்திலிருந்து டூப் போடாமல் குதித்த அஜித்

August 8, 2017 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படம் வரும் 24ந் தேதி வெளியாகவுள்ளது. தல ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் எடிட்டர் ரூபன் படத்தின் சண்டைக்காட்சிகள் குறித்து ஒரு சில தகவல்களை கூறியுள்ளார்.

விவேகம் படத்தில் அஜித் 50 அடி உயர மரத்திலிருந்து குதிப்பது போல் ஒரு காட்சி உள்ளதாம், இதை டூப் போடாமல்அஜித் நடித்தார். மேலும், ஒரு பாலத்தில் வரும் சண்டைக்காட்சி மிக பரபரப்பாக இருக்கும் என்றும், இரண்டு ரயில்களுக்கு இடையே அஜித் போடும் சண்டையை எடிட் செய்யும் போது தனக்கே பயமாகவும், வியப்பாகவும் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதைபோல் 20 கார்கள் துரத்தும் காட்சிக்கு இடையே அஜித் பைக்கில் செய்யும் சாகசங்கள் அபாரம் என்றும் தெரியவந்துள்ளது.இதனால் , படத்தை பார்க்கவேண்டிய ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது என்றே கூறவேண்டும்.

மேலும் படிக்க