• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இத்தனை வருஷத்துல எந்த கேப்டனுக்கும் இந்த தகுதி இல்ல: ரவி சாஸ்திரி!

August 2, 2017 tamilsamayam.com

20 வருஷத்துல எந்த கேப்டனும் சாதிக்காத விஷயத்த இந்திய அணி கேப்டன் விராத் கோலி சாதித்துள்ளார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் கோலி தலைமையிலான இந்திய அணி, அந்நிய மண்ணில் இதுவரை இல்லாத அளவு இமாலய வெற்றியை ( 304 ரன்கள் ) பதிவு செய்து சரித்திரம் படைத்தது.

இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இதுவரை இந்திய கேப்டன் யாருக்கும் இல்லாத தகுதி கோலிக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,

தற்போது உள்ள இந்திய டெஸ்ட் அணி, கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஒன்றாக உள்ளனர். ஆனால், இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத விஷயத்தை இந்த , கோலி தலைமையிலான இளம் அணி சாதித்துள்ளது. இலங்கையின் காலேவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணி, எந்த கேப்டனின் தலைமையிலும் வென்றதில்லை. ஆனால், கோலி தலைமையில் புது சரித்திரமே படைத்துள்ளது. கடந்த 2015ல் கடந்த 22 ஆண்டில் இலங்கை மண்ணில் எந்த இந்திய கேப்டனும் சாதிக்காத சாதனையை கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளதை யாரும் மறக்க முடியாது.’ என்றார்.

மேலும் படிக்க