• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமான ஆம்புலன்ஸ் பைலட் வேலையை கைவிடும் இளவரசர் வில்லியம்ஸ்

July 27, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் முழுநேர அரச கடமைகளை செய்ய வேண்டி, அவர் செய்து வரும் விமான ஆம்புலன்ஸ் பைலட் வேலையை கைவிட உள்ளார்.

இங்கிலாந்தின் அரசி இரண்டாம் எலிசபெத் , கடந்த வருடம் தனது 9௦வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார்.இந்நிலையில் தனக்கு வயதாகி விட்டதால், அனைத்து அரச பணிகளை தன்னால் செய்ய இயலாது என்று உணர்ந்து, அரச பணிகளின் பாதி பொறுப்பை தனது மகன் இளவரசர் சார்லஸுக்கு தந்துள்ளார்.

இதனையடுத்து இளவரசர் வில்லியம்ஸ், ராணி எலிசபெத்தால் செய்ய முடியாத பணிகளை தான் தொடர போவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.அதன்படி, இன்று விமான ஆம்புலன்ஸ் பைலட்டாக தனது கடைசி நாள் பணியை செய்ய உள்ளார்.

மேலும் அவர் கடந்த 2௦௦6ம் ஆண்டு முதல் 2௦13ம் ஆண்டு வரை பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு , கேம்பிரிட்ஜ் விமான நிலையத்தில் விமான ஆம்புலன்ஸ் பைலட்டாக பணி செய்து வந்தரர்.

தற்போது, இளவரசர் வில்லியம்ஸ் தந்து மனைவி கேட் மற்றும் அவருடைய குழந்தைகள் இளவரசர் ஜார்ஜ் மற்றும் மகள் சார்லெட் உடன், ராணி எலிசபெத்துக்கு சொந்தமான சந்திரிங்காம் எஸ்டேட்டில் உள்ள அன்மர் ஹாலில் வசித்து வருகின்றார். ஆனால் அரசு பணிகளில் மேற்கொள்வதற்காக, தனது குடும்பத்துடன் லண்டன் நகரிலுள்ள கென்சிங்டன் அரண்மனையில் குடியேறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க