July 22, 2017
தண்டோரா குழு
இந்திய அளவில் புகழ்பெற்ற தொலைகாட்சி ரியாலிட்டிசோ தான் பிக் பாஸ். வடஇந்தியா அளவில் இருந்த இந்த நிகழ்ச்சி சமீபத்தில் தமிழிலும் தொடங்கபட்டது. இதனை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வழங்கி வருகிறார்.
தமிழை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழச்சி தொடங்கப் பட்டுள்ளது. இதனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் நடிகை முமைத் கானும் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், போதை பொருள் விவாகத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதில் நடிகை முமைத்கானும் ஒருவர். வரும் 27ம் தேதி அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இதனையடுத்துஅந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களை தொடர்பு கொண்டு வரும் 27-ம் தேதி அவரை ஆஜராக சொல்லும்படி போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மனை கொடுத்துள்ளனர். எனினும், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால் முமைத்கான் ஆஜராக காலஅவகாசம் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் முதல் ஆளாக நடிகை முமைத்கான் வெளியேற்றப்படுகிறார்.எனினும், முமைத்கானிடம் விசாரணை முடிந்த பிறகு அவரை மீண்டும் அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்க்க முடியுமா அல்லது மும்பையில் நடைபெற இருக்கும் 11வது சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்யலாமா என ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.