• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை சூப்பர் கிங்ஸை வரவேற்ற “தல” தோனி…

July 15, 2017 தண்டோரா குழு

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு காரணம் தோனி தான்.

சென்னை ரசிகர்கள் தோனியை தல தோனி என்று தான் செல்லமாக அழைப்பார்கள். ஆனால், சூதாட்டப் புகாரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக தோனி புனே அணிக்காக விளையாடி வந்தார்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தடை காலம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ்சென்னை அணி ரசிகர்கள் தோனியை வரவேற்று பல்வேறு வகையில் சமூக வலைத்தளங்களில் போஸ்டர்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், இன்று தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தான் டாப் ஹிட். தல தோனி மஞ்சள் நிற ஜெர்சியில் பின்பக்கம் திரும்பி நிற்பது போன்ற அதே புகைப்படம் டுவிட்டரில் விசில் போடத் தயாராகுங்கள் சிங்கங்களே என்ற டேக்குடன் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க