• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானநிலையத்தில் 3 மாத நாய்க்குட்டி மீட்பு

July 7, 2017 தண்டோரா குழு

அமெரிக்கா லாஸ்வேகாஸில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் 3 மாத நாய்குட்டி ஒன்று விமானநிலைய ஊழியர்களால் மீட்கப்படுள்ளது.

நாய்குட்டி ஒன்று விமான நிலைய கழிவறையில் ஒரு பையில் வைக்கப்படிருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். அதனுடன் ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.

அக்கடிதத்தில் “என்னுடைய பெயர் சூயி. என்னுடைய உரிமையாளர் வீட்டில் நேர்ந்த பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியேறினார். விமானத்தில் என்னை அழைத்து செல்ல முடியவில்லை. என்னை இங்கு விட்டு விட்டு போகவும் அவருக்கும் மனமில்லை. ஆனால்,வேறு வழியில்லாமல் என்னை இங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். “ என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும் நாய்க்குட்டியின் தலையில் அடிப்பட்டுள்ளது. அதை கால்நடை மருத்துவரிடன் தயவாய் காட்டவும். நான் சூயியை அதிகாமாக விரும்புகிறேன். அதை நல்ல படியாக பார்த்துக்கொள்ளவும் என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

விமானநிலையத்தின் செய்திதொடர்பாளர் கிறிஸ்டின் க்ருஸ் கூறுகையில்,

“அந்த நாய்குட்டி ‘கோன்னோர் மில்லி’ நாய் மீட்பு குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். இதற்கு முன்பாக உரிமையாளர்களிடம் இருந்து பிரிந்து போகும் செல்ல பிராணிகளை அதன் உரிமையாளர்களிடம் சேர்த்துள்ளோம். ஆனால், சூயியின் உரிமையாளர் யார் என்று தெரியாததால், அதை எப்படி அவரிடம் சேர்ப்பது என்று தெரியவில்லை” என்று கூறினார்.

கோன்னோர் மில்லி நாய் மீட்பு குழுவின் தலைவர் பிளைர் கூறுகையில், “சூயியின் உரிமையாளர் விமானத்தில் எடுத்து செல்ல முடியாமலும், விமான நிலையத்தில் விட்டுவிட்டு செல்ல முடியாமலும் இருந்த பரிதாபமான நிலையை அவர் எழுதியிருந்த கடிதத்தின் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. ” என்று கூறினார்.

மேலும் படிக்க