• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிருடன் புதைக்கப்பட்ட ஆண் குழந்தை !

July 5, 2017 தண்டோரா குழு

மத்திய பிரதேஷ் மாநிலம் பர்வானியில் புதைக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேஷ் மாநிலத்தின் பர்வானி நகரின் அருகிலுள்ள ஒரு கிராமத்தின் இடுக்காடு அருகில் சில சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. உடனே சிறுவர்கள் அங்கிருந்து ஓடி, அருகே வசித்து வரும் ஷேர் சிங் மற்றும் சுனிதா என்னும் தம்பதியினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே, அவர்கள் அந்த இடத்திற்கு சென்று, சத்தம் வரும் இடத்தை தோண்டியுள்ளனர். அப்போது பிறந்த சில தினங்களே ஆன ஆண் குழந்தை புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தையை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பர்வானி காவல்துறைக்கு தகவல் தந்தனர்.

“இந்த குழந்தையை யார் அங்குகொண்டு வந்து புதைத்தனர் என்று தெரியவில்லை. காலை நேரத்தில் யாரும் வந்து இடுக்காடில் குழி தோண்டவில்லை. இந்த குழந்தை உயிருடன் இருப்பது அதிசயமானது” என்று பர்வானி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுனிதா கூறுகையில்,

“எங்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு ஆண் குழந்தை வேண்டுமென்று என் கணவரும் நானும் கடவுளிடம் பிராத்தனை செய்து வந்தோம். எங்கள் பிராத்தனையின் விளைவாக இந்த குழந்தை கிடைத்துள்ளது. இதை நாங்கள் தத்தெடுக்க முடிவு செய்துள்ளோம். இந்த குழந்தையை நாங்கள் கண்டுப்பிடிதத்தால் அதை நாங்களே வளர்க்க எங்களுடைய கிராமத்து மக்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்” என்று கூறினார்.

“அந்த குழந்தை பிறந்து 1௦ அல்லது 12 நாள் தான் இருக்கும். அதனுடைய எடை 2 கிலோ. அதற்கு ஜுரமும் சிறிய சுவாச பிரச்சனை உள்ளது. ஆபத்து ஒன்றும் இல்லை. குழந்தை சீரான நிலையிலுள்ளது” என்று அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க