• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகுபலியை மிஞ்சும் 2.0! தாறுமாறாக எகிறும் பட்ஜெட்!!

July 5, 2017 tamilsamayam.com

ஷங்கரின் இயக்கத்தில் தயாராகி வரும் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 பட்ஜெட் 400 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனமான லைக்கா தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் 2.0 திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. படத்தின் 75 சதவீத படப்பிடிப்புகள் முடிவுற்ற நிலையில் பட்ஜெட் அதிகரித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட 2.0 தற்போது 400 கோடி ரூபாயை தொட்டுள்ளதாம்.

அக்ஷய் குமாரின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினி, எமி ஜாக்சன் டூயட் உட்பட ரஜினி இன்னும் 35 நாட்கள் நடிக்க வேண்டியுள்ளது. படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருவதால் அதற்கு உரிய லைட், செட் அமைக்க அதிக செலவானதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். படப்பிடிப்பு முடியும் போது பட்ஜெட் 350 கோடியை தொட்டிருக்கும் என்றும், அதன்பின்னர் கிராபிக்ஸ் வேலைகளுக்கு 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவே 400 கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகளுக்கு தனியாக செலவாகும் என்று சொல்கின்றனர். படத்தை 3டி தொழில்நுட்பத்தில் திரையிட வேண்டும் என்பதால் லைக்கா நிறுவனம் 300 திரையரங்குகளை 3டி தொழில்நுட்பத்தில் மாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க