• Download mobile app
25 Oct 2025, SaturdayEdition - 3545
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணவருடன் விவாகரத்து பெற்றார் ரஜினியின் இளைய மகள்

July 4, 2017 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, இவர் கடந்த 2010ல் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் இனி சேர்ந்து வாழமுடியாது என்று முடிவு செய்து, விவாகரத்து பெற முடிவு செய்தனர்.இதற்காக, அவர்கள் சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

நீதிமன்றம் இருவருக்கும் 6 மாதம் அவகாசம் வழங்கியது. நீதிமன்றம் வழங்கிய 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.இதையடுத்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க