உலகம் முழுவதும் நவீன மயமாகி வருவதுடன் கணினி பயன்பாடும் அதிகரித்துள்ளது. கூடவே கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஹேக்கர்களால் நம் மூளையிலிருந்து நமக்குத் தெரியாமல் பாஸ்வேடு உள்ளிட்ட விவரங்களைத் திருட முடியும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் பிர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. உலகில் பலரும் ரோபாடிக் விளையாட்டு பொம்மைகள் மற்றும் வீடியோ கேம்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள். அப்படி அவர்கள் விளையாடும் போதே எலெக்ட்ரோ என்செஃபலோகிராப் (இ.இ.ஜி.) என்ற ஹெட்செட் மூலம் அவர்களது பார்வேர்டை திருட முடியும் என ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.
மேலும், மூளையால் கட்டுப்படுத்தும் விதமாக எலெக்ட்ரோ என்செஃபலோகிராப் (இ.இ.ஜி.) ஹெட்செட் உருவக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, ஒருவர்வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் ஹெட்செட்டை அணிந்த படியே வங்கி இணையதளத்தில் லாக்-இன் (Log in) செய்தால், சில வைரஸ் மென்பொருட்களின் உதவியுடன் அவரது மூளையில் இருந்து பாஸ்வேடு போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து அலபாமா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் நிதிஷ் சக்சேனா கூறுகையில்,
எலெக்ட்ரோ என்செஃபலோகிராப் (இ.இ.ஜி.) ஹெட்செட்தற்போது ஆன்லைனில் எளிதில் கிடைக்கிறது. இது ஒரு நல்ல ஒரு டெக்னாலஜியாக இருந்தாலும் இதற்கு தேவையான பாதுகாப்பு விஷயங்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது உள்ள சூழலில் இது அவசியமாகிறது என்றார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது