• Download mobile app
14 Oct 2026, WednesdayEdition - 3899
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு ‘ஆர்டர் ஆப் கனடா’ விருது

July 1, 2017 தண்டோரா குழு

கனடா நாட்டில் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் கனடா’ இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.

‘ஆர்டர் ஆப் கனடா’ விருது கனடா நாட்டின் உயரிய விருதாகும்.இந்த விருது அந்நாட்டின் சிறந்த குடிமகன், நாட்டிற்கு செய்த சிறந்த சாதனை மற்றும் சேவையை அங்கீகரித்து வழங்கப்படும். அந்த வகையில் கனடா நாட்டின் ஆயுதப்படைக்கு ஆதரவு அளித்ததற்காகவும், உலகளவில் சமுதாய தொண்டு செய்ததற்காகவும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடா நாட்டின் 15௦வது தினத்தை முன்னிட்டு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் அவருடைய மனைவி கமில்லாவுடன் கலந்துக்கொள்ள கனடா வந்துள்ளனர். இந்த விழாவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ‘ஆர்டர் ஆப் கனடா’ விருது கனடா நாட்டின் மக்களுக்கு தான் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் அரசக்குடும்பதினர் தனிசிறப்புடைய தோழமை பிரிவின் கீழ் இந்த விருதை வாங்க தகுதியுடையவர்கள் ஆவார்.

இளவரசர் சார்லசை அடுத்து,இளவரசர் சார்லசின் தந்தை பிரினஸ் ஃபிளிப் 2013ஆம் அண்டில் இந்த விருதை பெற்றுள்ளார்.

மேலும் படிக்க