• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூலி வேலை செய்யும் யோகா வீராங்கனை

June 30, 2017 தண்டோரா குழு

சத்தீஸ்கர் மாநிலத்தில் யோகா போட்டியில் தங்கம் வென்ற பெண் கடனை திருப்பி தர கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நகரில் தாமினி சாஹு(19) என்னும் பெண், ராய்பூரிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தாரா கிராமத்தை சேர்ந்த யோகா வீராங்கனை ஆவார்.

நேபாலின் தலைநகரான காத்மண்டுவில் மே 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற South Asian Yoga Sport Championship போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் ஒரு தங்க பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், மற்ற யோகா போட்டியில் கலந்துக்கொண்டு, 3 தங்க பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்.

இது குறித்து தாமினி கூறுகையில்,

“காத்மண்டுவில் நடந்த போட்டியில் கலந்துக்கொள்ள என்னிடம் பணம் இல்லை. ராய்பூர் நகரின் குருத் பகுதியை சேர்ந்த அமைச்சர் அஜய் சந்திரகரிடம் பண உதவி கேட்டேன். ஆனால், எனக்கு பண உதவி கிடைக்கவில்லை. பிறகு 2% வட்டிக்கு கடன் வாங்கி போட்டியில் கலந்துக்கொண்டு, தங்க பதக்கம் வென்றேன். மீண்டும் வீடு திரும்பிய பின், வாங்கிய கடனை திருப்பி தர, கூலி வேலை செய்து வருகிறேன்” .

தினமும் 8 முதல் 1௦ மணிநேரம் வேலை செய்தும், ஒரு நாளைக்கு 1௦௦ முதல் 15௦ ரூபாய் தான் கிடைக்கிறது. எனது தந்தை ஒரு மாற்றுத்திறனாளி. எனது தாயும் என்னுடன் சேர்ந்து கூலி வேலை செய்கிறார். மாலையில் நேரம் கிடைத்தால் யோகா செய்வேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க