• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓடிஷாவில் சீருடை அணியாத காவலாளிக்கு வினோத தண்டனை

June 30, 2017 தண்டோரா குழு

ஓடிஷாவில் சரியாக சீருடை அணியாத நான்கு ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டிப்போடும் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிஸா மாநிலத்தின் பரிபாடா என்னும் இடத்தில் ரத யாத்திரை நடைபெற்றது. அந்த யாத்திரை நிகழ்ச்சியை ஒழுங்குப்படுத்த ஊர்காவல் படை பிரிவினர் நியமிக்கப்படிருந்தனர். அப்போது நான்கு வீரர்கள் சரியான சீருடை அணியவில்லை என்று ரிசர்வ் இன்ஸ்பெக்டர் அசோக் குமார் சேதி கவனித்துள்ளார்.

கோபம் அடைந்த அவர் சீருடை அணியாத நான்கு பேருக்கும் முட்டிப்போடும் தண்டனையை அளித்துள்ளார். அந்த நான்கு பேரில் ஒருவர் பெண். அவர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பணிசெய்கிறார்கள். அவர்களுக்கு 22௦ ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அசோக் சேதி கூறுகையில்,

“ரத யாத்திரை நடைபெற்ற நாளில் காக்கி பேண்ட்டும் சாதாரண சட்டையை அணிந்திருந்தனர். சரியான சீருடை அணியாததால், அவர்களை தண்டிக்கும்படி, நான்கு பேரையும் மூன்று நிமிடம் முட்டிப்போடும்படி உத்தரவிட்டேன்” என்று கூறினார்.

இச்சம்பவம் குறித்து, Director General of Police (Home Guards), பினாய் பீஹாரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை முடிந்த பிறகு, சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க