சங்கமித்ராவில் நடிப்பதற்கு நயன்தாராவுக்குத் தான் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று படமான சங்கமித்ரா 8ம் நூற்றாண்டை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
இதில், இளவரசியாக நடிக்க முதலில் ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். மேலும், வாள் சண்டையும் கற்று வந்தார். இந்நிலையில், இப்படத்திலிருந்து அவர் விலகியதன் காரணமாக தற்போது அனுஷ்கா, நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம் ஆகிய படங்களில் நயன்தாரா பிஸியாக நடித்து வருகிறார். மற்ற நடிகைகளை விட நயனுக்குத் தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீத்து சந்திராவும் இப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு