ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் தான் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த மாதமே சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்ளவதாக இருந்தது. திடீரென அந்த சந்திப்பு ரத்தானது. இதையடுத்து மே15 முதல் ரஜினி ரசிகர்களை சந்திப்பதாக அறிவித்தார். அதன் படி இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
நான் அப்பவும் சொல்றேன், இப்பவும் சொல்றேன். அந்த ஆண்டவன் கையில்தான் என் வாழ்க்கை இருக்கு.அவன் கையில் இருக்கும் ஒரு கருவி தான் நான். அவன், நடிகனா என்னை பயன்படுத்தறான். நான் நடிச்சுட்டிருக்கேன். நாளைக்கு என்னவாக பயன்படுத்தறானோ, அதுக்கு நியாயமா, உண்மையா இருப்பேன். இப்ப மக்களை மகிழ்விக்கணும். பண விஷயங்கள் அப்புறம்தான். அதே போல, என்ன பொறுப்பு கொடுத்தாலும் நியாயமா, சத்தியமா இருப்பேன். அது என்னன்னு எனக்கு தெரியாது. அது கடவுள் கையில தான் இருக்கு என்றார்.
மேலும், அரசியல் ஆசை இருக்கிற என் ரசிகர்களுக்கு இப்பவே ஓன்று சொல்லிக்கிறேன். நான் அரசியலுக்கு வரலைன்னு சொன்னா ஏமாந்திடுவீங்க. அப்படி அரசியலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டால்,காசு சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போதே விலகி விடுங்கள். அந்த மாதிரி ஆட்களை கிட்ட கூட சேர்க்க மாட்டேன். நுழைய கூட விடமாட்டேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு