விரைவு ரயில் வரும் பாதையில் ஓடி தற்கொலை செய்துக்கொள்ள முயன்ற மாணவியை ரயில்வே ஊழியர் தடுத்து காப்பாற்றியுள்ளார்.
தென் கிழக்கு சீனாவின் புசியன் மாகாணத்தில் உள்ள ரயில் நிலையத்தில் விரைவு ரயில் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது அந்த பாதையில் ஒரு கல்லூரி மாணவி ஒருவர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள்.
அவர் தற்கொலை செய்ய முயற்சி செய்கிறாள் என்று உணர்ந்த அங்கிருந்த ஒருவர் வேகமாக ஓடி, அவரை பிடித்து இழுத்துள்ளார்.
எனினும், அவரையும் மீறி தற்கொலை முயன்றுள்ளார் அப்பெண். ஆனாலும் அந்த நபர் அப்பெண்ணை பிடித்து இழுத்துள்ளார். அப்போது அந்த நபரின் தலை அருகிலிருந்த கான்கீரிட் மீது மோதியது. அதையும் பொருட்படுத்தாமல், அவளை விடுவதாக இல்லை என்று அவளுடைய கைகளை இருக்க பிடித்தார்.
சில நிமிடம் கழித்து, விரைவு ரயில் வந்து சேர்ந்தது. இவர்களுடைய நிலையை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர்.தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த கல்லூரி மாணவியின் உயிரை காப்பாற்றிய அந்த நபர் ரயில் நிலைய ஊழியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு