• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி 3 வரவாய்ப்பில்லை கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்

May 9, 2017 தண்டோரா குழு

‘பாகுபலி’படத்தின் மூன்றாம் பாகம் வர வாய்ப்பில்லை என்று, அந்த படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகிவிட்டன. இதில், இரண்டாவது பாகம் பத்து நாட்களுக்கு முன்பு வெளியாகி ரூ.1000 கோடி வசூலித்து, இந்தியாவில் 1000கோடி வசூல் சாதனை படைத்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. எனினும், இப்படம் அடுத்த சாதனையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ’பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு பாகுபலிக்கு இன்னும் ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். இதனால் ‘பாகுபலி 3’ படம் வருமா எனரசிகர்களும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ராஜமெளலியும் ஒரு பேட்டியில் கதை ரெடியானால் பாகுபலி 3 எடுப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின்கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘பாகுபலி 2’ படத்தின் தலைப்பிலேயே ‘முடிவு’என்ற இணை தலைப்பையும் வைத்துள்ளதால் மூன்றாம் பாகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.மேலும், ”இரண்டு பாகங்களிலும் ‘பாகுபலி’படத்தின் கதையை முடித்துவிட்டோம். மூன்றாம் பாகம் வர வாய்ப்பில்லை.

ஆனாலும், டிவி தொடர்கள், காமிக்ஸ் தொடர்கள் வடிவில் ‘பாகுபலி’இருக்கும்,” எனக் குறிப்பிட்டும் உள்ளார்.

மேலும் படிக்க