• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மிஸ் கூவாகமாக திருநங்கை ஆண்ட்ரியா தேர்வு செய்யப்பட்டார்

May 9, 2017 தண்டோரா குழு

விழுப்புரம் கூவாகத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை ஆண்ட்ரியா அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் கோலாகலமாக வருடா வருடம் திருநங்கைகளுக்கு மிஸ் கூவாகம் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றனர்.

மிஸ் கூவாகம் போட்டியை காண பொதுமக்கள் அதிக அளவு திரண்டனர் . இதனால் அப்பகுதியே திருவிழா போல் கோலாகலம் பூண்டது. திருநங்கைகள் அலங்காரத்துடன் மேடையில் கேட் வாக் செய்தனர் . சுமார் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த ஆண்ட்ரியா முதல் பரிசைப் பெற்றார். இவர் ஆடை வடிவமைப்பு கல்வி கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக சேலத்தை சார்ந்த கவி , மூன்றாவதாக மதுரையை சேர்ந்த வருணிதாவும் வெற்றி பெற்றனர்.

இந்த விழாவில் பங்கேற்ற திருநங்கைகள் “திரைப்படங்களில் திருநங்கை வேடங்களில் திருநங்கைகள் மட்டுமே நடிக்க வேண்டும், திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் .

மேலும் படிக்க