2 வயதுச் சிறுவன் ஒருவன் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த தனது தாயைப் பின் இருக்கையிலிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது.
மில்வாகி நெடுஞ்சாலையில் நடந்த இச்சம்பவம் மேலை நாட்டு நாகரீகத்தின் சீரழிவுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
பாட்ரிஸ் பிரைஸ் என்னும் 26 வயது பெண்மணி தனது கார் பழுதடைந்த காரணத்தினால் தனது தோழரின் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். அவரின் 2 வயது மகன் பின் இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தான்.
பாட்ரிஸ் பிரைஸின் தோழர் பாதுகாப்புக் காவலர் பணியில் இருப்பவர். அவரது சுயதேவைக்காக அவர் தனது துப்பாக்கியைப் பின் இருக்கையில் வைத்திருக்கிறார். பின் விளைவுகளை யோசிக்கும் அளவுக்கு வயதில்லாத 2 வயதுச் சிறுவன், துப்பாக்கியை எடுத்து வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த தனது தாயைச் சுட்டுக் கொன்றுவிட்டான்.
பாட்ரிஸ் பிரைஸின் தந்தை ஆன்டிரி பிரைஸ் ,3 குழந்தைகளுக்குத் தாயான தன் மகள் மிகுந்த உழைப்பாளி என்றும், தனது இதய நோயின் காரணத்தினால் மகளின் இறந்த உடலைக் கூடப் பார்க்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
வாஷிங்டன் போஸ்ட் கணக்கின் படி 2015ல் மட்டும் 43 குழந்தைகள் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தன்னையோ அல்லது மற்றவர்களையோ சுட்டுக்கொன்றுள்ளார்கள், அல்லது காயப்படுத்தியுள்ளார்கள். வாரத்திற்கு ஒரு சம்பவமாக நடந்தவற்றில் இதோ ஒரு சில,
1. நியூ மெக்சிகோவில் ஒரு சிறு குழந்தை தன் கர்ப்பமான தாயையும், தனது தந்தையையும் சுட்டதில் இருவருக்கும் பெருத்த காயங்கள் ஏற்பட்டன.
2. வ்ளோரிடா வாழ் சிறுவன் தன் ஒரு வயதுச் சகோதரியை முகத்தில் சுட்டுக் காயப்படுத்தியது.
3. வ்ளோரிடாவில் மற்றுமொரு தாய் தனது 4 வயது மகனால் சுட்டுக்கொல்லப்பட்டது.
4. டெக்ஸாஸில் வசிக்கும் 3 வயது சிறுவன் தனது தாத்தாவின் துப்பாக்கியை உபயோகித்து தன்னையே மாய்த்துக் கொண்டது.
5. மூன்று வயது கீளீவ்லாண்ட் சிறுவன், ஒரு வயது குழந்தையைச் சுட்டுக் கொன்றது.
6. அலாபாமாவின் 2 வயது சிறுவன் தனது 31 வயது தந்தையை தலையில் சுட்டுக் கொன்றது.
இது போல பல உள்ளது.
இந்த 43 குழந்தைகளும் 4 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களில் 13 பேர் தங்களை மாய்த்துக்கொண்டவர்கள், பிறர் மற்றவர்களுக்குத் தீங்கிழைத்தவர்கள். இவர்களில் 3 பேரைத் தவிர மற்ற அனைவரும் சிறுவர்களே.
துப்பாக்கி வன்முறை கட்டுப்படுத்தும் அமைப்பைச் சேர்ந்த டான் கிராஸ் என்பவர், நாட்டில் காணப்படும் முறையற்ற துப்பாக்கிக் கலாச்சாரத்தின் முன்பு இவை குறைந்த எண்ணிக்கையே என்று கூறியுள்ளார். மற்றும் இது ஒரு கொடுமையான நோய் என்றும், முறையற்ற வகையில் உரிமம் வழங்கியதின் விளைவு என்றும் கூறியுள்ளார்.
இந்த 43 பேர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது பெற்றோர்களின் துப்பாக்கியையே உபயோகித்துள்ளனர். அதாவது தோட்டாக்கள் பொருத்திய துப்பாக்கிகளை குழந்தைகள் கையில் கிடைக்குமாறு வைத்த பெற்றோர்களின் பொறுப்பின்மையே இதற்குக் காரணம்.
நேஷனல் ரைஃவில் அசோசியேஷன் அமைப்பு, கூறுகையில், துப்பாக்கி உரிமம் வைத்திருப்போர்க்குக் கையாளும் முறையையும், மற்றும் செய்யத் தகாதன, முதலியவற்றையும், சிறந்த பயிற்சிகளையும் கற்றுத் தெரிந்து கொள்வது கட்டாயமாக்கப் படவேண்டும் என்று தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் தடுக்கக்கூடிய ஒன்றே என்றும் கூறியுள்ளது.
அதன் செயலர் ஜெனிஃவர் பெகர் தெரிவிக்கையில், தாங்கள் இது வரையில் 28 மில்லியன் குழந்தைகளைச் சந்தித்து, தகுந்த அறிவுரை வழங்கியதின் விளைவாகக் குற்றங்கள் சமீபத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
பச்சைக் களிமண்ணைப் பாண்டமாக்குவதும், பாழடிப்பதும் குயவன் கையில்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்