• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு.

April 29, 2016 தண்டோரா குழு

சமூக வலைத்தளங்களில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வலைத்தளம் பேஸ்புக். சிறுவர்கள், பெரியவர்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் என உலக அளவில் பேஸ்புக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் நிகர லாபம் மும்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அதன் நிகர லாபம் 9,800 கோடி ரூபாயை ‌தொட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜுகும்பேர் தெரிவித்துள்ளார்.

மேலும், பேஸ்புக் நிறுவனம் மும்ம‌டங்கு லாபம் பெற்றதன் மூலம் நடப்பாண்டில் மிகச்சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளதாகவும், பேஸ்புக் பயனாளிகள் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்து 165 கோடியை எட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் லைவ் வீடியோ, கணக்டிவிட்டி, மேசென்ஜர் போன்ற புதிய வசதிகள் அறிமுகப் படுத்தியதன் மூலம் புதிதாக 25 லட்சம் மக்கள் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளதாக ஜுகும்பேர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க