ரூ 3௦ லட்சம் மோசடி புகாரில் சிக்கிய தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது இன்னும் ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அவரிடம் ரூ 30 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது .அப்போது “நீதிமன்ற உத்தரவிட்ட பிறகும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை? புகார் தெரிவித்த பினனர் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? அமைச்சர் என்றால் சட்ட விதிகளுக்கு மேலானவரா” என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வரும் 8 -ம் தேதி தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு