தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் என்ன ஆனது என்று விக்னேஷ் சிவனிடம் சூர்யா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“போடா போடி”, ” நானும் ரவுடி தான் ” ஆகிய படங்களை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தற்போது இயக்கி வரும் படம் “தானா சேர்ந்த கூட்டம்”. இந்தப் படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், சரண்யா, செந்தில், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜூலை மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.
பெரும்பாலும் பிரபலங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் நடந்து கொண்டிருக்கும்போதே பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இந்த படம் இறுதிகட்டத்தை நெருங்கிய பிறகும் பர்ஸ்ட் லுக் இன்னும் வெளியாகவில்லை. இது சூர்யா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதனால், விக்னேஷ் சிவனின் இணைய பக்கத்திற்குள் சென்று பர்ஸ்ட் லுக் குறித்து சூர்யா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், முதலில் ரெடி பண்ணிய பர்ஸ்ட் லுக் சரியில்லாததால் வேறு ஒரு பர்ஸ்ட் லுக்கை படக்குழு தயார் செய்து வருவதாகவும், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு சார்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு