• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இட்லி சாட்

April 28, 2017 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

மினி இட்லி – 16

தயிர் – 4 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் – சிறிது

சீரகப் பொடி – சிறிது

சாட் மசாலா – சிறிது

புதினா சட்னி – சிறிது

இனிப்பு சட்னி – சிறிது

ஓமப்பொடி – சிறிது

வெண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மின் இட்லியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் இட்லிகளை வைத்து, மேலே சிறிது வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு தட்டில் அந்த மினி இட்லிகளை வைத்து, அதன் மேல் முதலில் தயிர் ஊற்றி, மேலே இனிப்பு சட்னி, புதினா சட்னி, வெங்காயம், சிறிது சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா தூவி, இறுதியில் ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லியைத் தூவ வேண்டும். இப்போது சுவையான இட்லி சாட் ரெடி!!!

மேலும் படிக்க