• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேகத் தடைக்கு பதிலாக 3டி வண்ணப் பூச்சுக்கள் – மத்திய அரசு பரிசீலனை.

April 27, 2016 தண்டோரா குழு.

பொதுவாகச் சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடையைப் பார்த்ததும் ப்ரேக் பிடித்து வாகனத்தின் வேகத்தைக் குறைத்து கொள்வார்கள். எனினும் வேகத்தடை பள்ளிகள், சந்தைகள், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் என முக்கிய இடங்களில் போடப்பட்டிருக்கும். இதனால் விபத்தில் ஏற்படுவதில் இருந்து தவிக்கலாம்.

இருப்பினும் சில அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளுக்கு சில நேரங்களில் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து வேகத்தடையால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்க 3 டி தொழில்நுட்பம் போன்றே காட்சியளிக்க கூடிய முப்பரிமாண வண்ணப் பூச்சுக்களை முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நிதின் கட்காரி , முப்பரிமாண வண்ணப் பூச்சுக்களை பயன்படுத்துவதன் மூலம் வேகத்தடை அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அதன் மூலம் ஏற்படும் விபத்துகளும் தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் கட்கரி தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா, கனடாவில் இதே போன்ற நடைமுறை அமலில் உள்ள நிலையில் அது இந்தியாவிலும் கொண்டுவரப்பட உள்ளது. எனினும் அரசின் இந்த யோசனை பலன் தராது என்று பலர் கட்கரிக்கு டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க