• Download mobile app
18 Jan 2026, SundayEdition - 3630
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நல் வினை தலை காக்கும், தீ வினை கால் எடுக்குமோ?

April 26, 2016 தண்டோரா குழு

தாவூத் இப்ரஹிம் இந்தியாவால் மிகவும் தேடப்படும் நிழல் உலக தாதா. இவர் கராச்சியில் கிளிவ்டன்ரோட்டில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்.

ஆனால் நமது அண்டை நாடான பாகிஸ்தான் , தாவூத் தங்களது நாட்டிலேயே இல்லை என்று மறுக்கிறது.

1993 ம் ஆண்டு பல நிரபராதிகளின் உயிரையும் ,வாழ்க்கையும் பலி கொண்ட மும்பை தாக்குதலுக்கு முழு முதல் பொறுப்பு இந்த தாதாதான் .இன்னும் பல நிழல் உலக அராஜகங்களுக்கும் உத்தரவாதி இந்த மனிதர் தான்.

இப்பொழுது ஆட்டம் அடங்கும் நேரம் போலும்.இவர் காங்கரீன் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரத்தத்தின் ஓட்டம் சீராக இல்லா விட்டாலும், இரத்த அழுத்தம்

அதிகமாக இருந்தாலும்,இரத்தத்தில் சர்க்கரை அதிகரித்திருந்தாலும், இந்நிலை ஏற்படலாம் என்பது கருத்து. உடலிலுள்ள திசுக்கள் விரைவாக மடியும் என்றும் கூறுகிறார்கள். விரல்கள், கணுக்கால், முதலியவை முதலில் பதிக்கப்படுமாம்.

இந்த காரணங்களினால் தாதாவின் இரு கால்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் எச்சரித்துள்ளனர்.

ஆனால் அவரது நிழலும், வலது கையுமான சோட்டா ஷகீல் இவை அனைத்தும் உண்மை அல்ல என்றும், தாவூதின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க