• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்கப்பூர் ஓபன் : காலிறுதியில் சிந்து தோல்வி!

April 15, 2017 tamilsamayam.com

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.

சிங்கப்பூரில் ஆண்டு தோறும் பாட்மிண்டன் தொடர் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி .வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.

இதில் துவக்கம் முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து முதல் செட்டை 11-21 என இழந்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் எழுச்சி பெற தவறிய சிந்து, அந்த செட்டையும் 14-21 என கோட்டைவிட்டார்.

முடிவில், இந்தியாவின் பி .வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 11-21, 14-21 என்ற செட்களில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

சாய் பிரனீத் அசத்தல்:

இதே போல ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், தாய்லாந்து வீரர் தாங்கோசாக்கை எதிர்கொண்ட இந்தியாவின் சாய் பிரனீத் 21-15, 14-21, 19-21 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மேலும் படிக்க