• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தண்ணீர் தேடி சென்ற 5 மான்கள் வாகனம் மோதி உயிரிழப்பு

April 13, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே குடிநீர் தேடி சென்ற 5 புள்ளி மான்கள் அதிவேகமாக சென்ற வாகனம் மோதி உயிரிழந்தன.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கோதபள்ளம் வண்ணத்தங்கரை குளத்தில் அதிகளவில் புள்ளிமான்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் குளம் வறண்டுள்ளதால் மான்கள் குடிநீர் தேடி அவ்வப்போது அருகில் உள்ள கிராமப்பகுதிக்குள் நுழைகின்றன.

இந்நிலையில், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் கூட்டமாக குடிநீர் தேடி ஊருக்குள் செல்ல வழித்தவறி, சேலம் – கொச்சின் தேசிய ஆறுவழி நெடுஞ்சாலையை கடக்க முயன்றன. அப்போது அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த ஐந்து புள்ளிமான்கள் உயிரிழந்தன.

மேலும் படிக்க