April 13, 2017 தண்டோரா குழு
தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி வழங்கினார். பாரலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் தில்லியில் குடியரசுத் தலைவரால் இன்று வழங்கப்பட்டது.
7 பேருக்கு பத்ம பூஷண், 75 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 89 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் வழங்கினார்.
பாரலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
அதே போல் திரைப்பட பாடகர் யேசுதாசு, ஜக்கி வாசுதேவ், பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தீபா கர்மாகர், சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
தில்லியில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.