மேலை நாடுகளில் தற்போது பல்வேறு நிறுவனங்களுக்குள் போட்டிகள் அதிகரித்து விட்டன. இதையடுத்து அங்கு விளம்பரப்படுத்துவதில் அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக்கொண்டு வித்தியாசத்தை காட்டி வருகின்றனர். இதில் பீச்சா நிறுவன மேலாளர் ஒருவர் ஒரு படி மேலே போய் தன்னுடைய நிறுவனத்திற்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு நகரத்தைத் திருமணம் செய்துள்ளது வேதனை கலந்த வேடிக்கையான விசயமாக உள்ளது.
இந்த வேடிக்கையான சம்பவம் நடந்தது பிரிட்டனில். அலெக்ஸ் ப்ரிட்லே(31) என்பவர் டொமினோஸ் பிட்சா மேலாளர். இவர் தன்னுடைய நிறுவனத்தின் வியாபாரத்தை பெருக்குவதற்காக ஸ்டோன் என்னும் ஒரு நகரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தின் வாயிலாக, அந்த நகரத்தோடு ஒரு தனிப்பட்ட ஈடுபாட்டை ஏற்படுத்திக்கொண்டதாக அவர் கூறினார். அவரது திருமணம், ஒரு பாதிரியாரால் முறையாக நடத்திவைக்கப்பட்டது.
திருமண உடையில், கெம்பீரமாக அலெக்ஸ் தோன்றியது காண்பவர்களை மிகவும் கவர்ந்தது. பாதிரியார் தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கி வாழ்த்தினார். இதையடுத்து லிச்பீல்ட்ரோடு என்னும் இடத்தில் ரெவரண்ட் ஜான் என்பவர் தம்பதிகளுக்கு காகித மலர்கள் தூவி நல்லாசியை வழங்கினார். பின்பு ‘ஐ தோ’ என்று எழுதி இருந்த ஒரு பிட்சாவை தம்பதியருக்குப் பரிசளித்தார்.
இதன்மூலம் அலெக்ஸ் தனது பிஸ்சா நிறுவனத்துக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.
மேலும் கூறுகையில், ஸ்டோன் நகர இளைஞர்களுக்குத் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
ஏப்ரல் 25, திங்கள்கிழமை, முதல் இந்த பிச்சா நிறுவனம் தனது முதல் ‘டேக்கவே சேவை’யை ஸ்டோன் நகரத்தில் துவங்க உள்ளது.
புதிதாகத் துவங்க இருக்கிற இந்த புதிய கிளைக்கான வேலையில் அலெக்ஸ் மற்றும் அவருடைய அணி மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஸ்டோன் நகரில் துவங்க உள்ள இந்தக் கிளைக்காக சுமார் 30 புதிய பணியிடங்களை டொமினோஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. பிட்சா தயாரிப்பாளர், மற்றும் வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள் பணியும் இதில் அடங்கும். ஆனால், பிஸ்ஸாவை வீடுகளுக்கு விநியோகம் செய்ய சரியான ஆட்களைத் தேடி வருகிறார்கள்.
ஸ்டோன் நகரில் தங்களுடைய புதிய சேவையை துவங்குவது ஒரு தனி சுகத்தைத் தருவதாகவும், வேலைக்கான காலியிடங்கள் தங்களிடம் இன்னும் இருப்பதால் அதை நிரப்ப உள்ளூர் மக்களிடம் அல்லது பகுதிநேர வேலையைத் தேடுபவர்களிடம் இருந்து பதிலை எதிர்பார்த்து கொண்டு இருப்பதாகவும் அலெக்ஸ் தெரிவித்தார்.
மேலும் அலெக்ஸ் கூறுகையில், முழுமை, நேர்மை, மற்றும் நம்பகத்தன்மையை நிரூபிக்க விரும்புபவர்கள் தான் வாடிக்கையாளர் சேவையை சரியாக வழங்க முடியும் என்றார்.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்