• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்த நீதிபதி

April 8, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசத்தில், முதன்மை நீதிபதி தேஜ் பகதூர் சிங் அதிக வழக்குகளுக்கு தீர்ப்பளித்து கின்னஸ் புத்தக்கத்தில் இடம் பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாக பணியாற்றி வருபவர் தேஜ் பகதூர் சிங். இவர் 327 பணிநாட்களில் 6,065 வழக்குகளை முடித்து வைத்துள்ளார்.

இது குறித்து தேஜ் பகதூர் கூறும்போது, இந்த எண்ணிக்கையில் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், வழக்குதாரர்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும்என்பதே இதன் நோக்கம். மேலும், குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்வு அளிக்கப்பட்ட பிறகு 903 தம்பதிகள் சேர்ந்துள்ளனர்”

இவ்வாறு தேஜ் பகதூர் கூறினார்.

இந்நிலையில் உலக சாதனை பட்டியலில் தேஜ் பகதூர் சிங் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதை கின்னஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மேலும் படிக்க