• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலை சின்னத்தை நீக்க உத்தரவு

April 7, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னத்தை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என இரு அதிமுக அணியினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 12-ம் தேதி நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க-வின் சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி ஆகிய இரு அணிகளும் போட்டியிடுகின்றன. இரட்டை இலைச்சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால் அச்சு ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே அ.தி.மு.க. அம்மா கட்சி இணையதளத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை தவறாக பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க மதுசூதனன் மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இரட்டை இலை சின்னத்தை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என இரு அதிமுக அணியினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நாளை மாலை 4 மணிக்குள் நீக்கியதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க