• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“எங்களுடன் சேர்ந்து பணியாற்றுங்கள்” உலக நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு

April 7, 2017 தண்டோரா குழு

சிரியாவில் நடந்து வரும் படுகொலையை நிறுத்தவும், அனைத்து வகையான தீவிரவாதத்தை ஒழிக்கவும் உலக நாடுகள் எங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீது அந்நாட்டு ராணுவம் ரசாயன தாக்குதலுக்கு நடத்தியாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், ரசாயன தாக்குதலுக்கு பதிலடி தர வியாழக்கிழமை தனது விமான படையை அனுப்பி, அந்நாட்டின் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

சிரியாவில் நடந்து வரும் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் ஒன்று சேர்ந்து அங்கு நடந்து வரும் போரை நிறுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்று வியாழக்கிழமை(ஏப்ரல் 6) டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.மேலும் நீதிக்கும் நேர்மைக்கும் அமெரிக்கா உறுதியாக நிற்கும் வரை, சமாதானமும், நல்லிணக்கமும் மேம்படும் என்று நம்புகிறோம் என்று டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் படிக்க