கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மாதந்தோறும் நடைபெறும் மருத்துவ கலந்தாலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருடன் அரசு அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள்.
இந்நிலையில் கடந்த பல மாதங்களாகவே அரசு மருத்துவமனை கல்லூரியில் உள்ள பிரசவ வார்டுக்கு சீனியர் மருத்துவர்கள் வருவதில்லை என்றும் ஜூனியர்கள் மட்டுமே வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேர்ல மருத்துவ மனை அதிகாரிகள் சீனியர்களாக பார்த்து பார்த்து பணிக்கு அனுப்பிவந்தனர். ஆனால் பின்னரும் அதே குற்றச்சாட்டு எழுந்துவந்தது.
பின்னர் அது குறித்து நேரடியாக விசாரணை செய்யும்போது தான் ஒரு உண்மை புரிந்தது. குற்றம் சாட்டிய பெண்கள் சிலர் எப்படி சீனியர் மருத்துவர்கள் வருவதில்லை எனக் கூறுகிறீர்கள் எனக் கேட்டதற்கு ஒருவர் கூட புடவை கட்டி வருவதில்லை அனைவரும் சுடிதார் போட்டே வருகின்றனர் எனப் பதில் கூறியுள்ளனர்.
அதனால் அந்த அரங்கில் உள்ள அனைவருமே சிரித்துள்ளனர். பின்னர் மருத்தவமனை நிர்வாகிகள் அவர்களிடம் வருபவர்கள் எல்லோரும் சீனியர் மருத்துவர்கள் தான் ஆனால் அவர்கள் சுடிதார் போட்டு வருவதால் ஜூனியர் என நினைத்துக்கொண்டு புகார் தெரிவிக்கக்கூடாது எனக் கூறி சமாதானப்படுத்தினர். இதனால் அந்தக் கூட்டத்திற்கு சுடிதார்ல வந்த சீனியர் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
உருவத்தைப் பார்த்து எடை போடக்கூடாதுன்னு சொல்லுவார்கள் ஆனா சுடிதார் போட்டவங்க எல்லாம் ஜூனியர் புடவை கட்டுனவங்க சீனியர்ன்னு கொள்கை வைத்திருக்கும் மக்களை என்ன செய்வதுன்னு புரியல.
மைன்ட் வாய்ஸ் … இப்போவும் சீனியர் டாக்டருங்க எல்லாம் சுடிதார்ல வராங்களான்னு எனக்கு தெரியல வேணும்னா நீங்களே பொய் விசாரிச்சுக்கொங்க……
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்