• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜி.கே.வாசனை சந்தித்தார் ஒ.பன்னீர்செல்வம்.

April 6, 2017 தண்டோரா குழு

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் இன்று(வியாழக்கிழமை) சந்தித்து பேசினார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயலிலாதவின் மறைவை அடுத்து ஆர்.கே நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைதேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் பல முனை போட்டிகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை இன்று அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார்.

தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதனனை ஆதரிக்க வேண்டி இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கட்சி வட்டாரங்கள் சார்பில் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்தின் கட்சி சார்பாக போட்டியிடும் மசூதனனுக்கு தன்னுடைய ஆதரவை ஜி.கே.வாசன் அளிப்பார் என்றும் இன்று மாலைக்குள் இந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க