• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துவக்க விழாவில் பிரம்மாண்டம் காட்டும் 10வது ஐ.பி.எல் போட்டி

April 4, 2017 தண்டோரா குழு

பத்தாவது ஐபிஎல் தொடரில் பிரம்மாண்ட துவக்க விழாக்கள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு
செய்துள்ளது.இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,)நடந்து வருகிறது.இதில் இந்திய நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பதால், ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் தொடருக்கு தனி வரவேற்பு உள்ளது.

அதன்படி இந்தாண்டு பத்தாவது ஐ.பி.எல். தொடர் நாளை முதல் துவங்கவுள்ளது. 47 நாட்கள் நடக்கும் இத்தொடரில் மொத்தமாக 60 போட்டிகள் நடக்கிறது. இந்த ஆண்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கிறது. இதற்காக எல்லா அணிகளும் தயாராகி வருகிறது.

வழக்கமாக துவக்க விழா மட்டும் நிறைவு விழாவில் மட்டும் தான் பிரமாண்டமான நிகழ்சிகள் நடக்கும். ஆனால், இந்த ஆண்டு எல்லா அணிகளும் தங்களது சொந்த மண்ணில் தனித்தனியாக துவக்கவிழா நடத்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில், ஐதராபாத் (ஏப்ரல்5), புனே (ஏப்ரல் 6), ராஜ்கோட் (ஏப்ரல் 7), இந்துார் (ஏப்ரல் 8), பெங்களூரு (ஏப்ரல் 8), மும்பை (ஏப்ரல் 9), கொல்கத்தா (ஏப்ரல் 13), டெல்லி (ஏப்ரல் 15) ஆகிய நாட்களில் துவக்க விழாக்கள் நடக்கவுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த துவக்க விழாக்களில் நடிகைகள் அனுஷ்கா சர்மா, கத்தரீனா கைப், அலியா பட், பிரனீத் சோப்ரா, தீபிகா படுகோன், சாரதா கபூர், ஷாருக்கான், சல்மான்கான்,டைகர் ஷெராப் என பாலிவுட்டின் நட்சத்திர பட்டாளமே கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் 200 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும் இந்த துவக்க விழாவில் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் இந்தியாவின் பல விதமான கலாச்சாரத்தை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க