• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் பெண் குற்றவாளிகள் அதிகம் உள்ள மாநிலம் எது தெரியுமா?

April 21, 2016 தண்டோரா குழு

குற்றச்செயல் என்றால் அதில் அதிகமாக ஈடுபடுவது ஆண்கள் தான். பெண்கள் குற்றச்செயலில் ஈடுபடுவது உலக அளவை விட நம் நாட்டில் குறைவு தான். இருந்தும் இந்தியாவில் பெண்கள் சிலர் குற்றச்செயலில் ஈடுபட்டுத் தான் வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவில் பெண் குற்றவாளிகள் அதிகமாக உள்ள மாநிலம் மகாராஸ்டிரா மாநிலம் தான். அம்மாநிலத்தில் உள்ள மும்பை மாநகரில் அதிக குற்றங்கள் நடைபெறுவது ஆச்சர்யமான விசயம் இல்லை, அதில் பெண்கள் அதிகமாக இருப்பது தான் ஆச்சரியமான விஷயம்.

தேசிய குற்ற ஆவணப்பிரிவு அறிக்கைபடி, 2014ம் ஆண்டு 3,834 பெண் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் (23.1 சதவிகிதம்), ஆனால் 2௦14ம் ஆண்டு ஆண்கள் 22.9 சதவிகிதமே குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். அதைப் போல் கடத்த வருடம் 3,115 பெண் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிலும் ஆண்களை விடப் பெண்களே அதிகமாக உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலான பெண்கள் ஆண், பெண் என பாராமல் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட முக்கிய குற்றங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் 95,174 பேரும், ஆந்திராவில் 64,916 பேரும் மேலும் மத்திய பிரதேசத்தில் 56,492 பெண் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒருவரின் நடத்தையை வைத்து அவர்கள் ஏன் குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதும் அவர்கள் மனஅழுத்தம் காரணமாகத் தான் குற்றச்செயலில் ஈடுபடுகிறார்களா? என்பதையும் கண்டறிய முடியும் எனச் சொல்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், முன்பெல்லாம் பெண்கள் தங்கள் பணத்தேவைக்காக விபசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போது அவர்களின் தேவை அதிகரித்து கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற செயல்களில் ஈட்டுகின்றனர் எனக் கூறினார்.

மனோதத்துவ நிபுணர், ஒருவர் கூறும்போது, பெரும்பாலும் பெண்கள் சமுதாயத்தின் மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டனர். மேலும், ஆண், பெண் எனப் பிரித்து இந்தச் சமூகம் பார்ப்பதே பெண்கள் அதிகமாகக் குற்றச்செயலில் ஈடுபடக் காரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க