• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திவிக பாரூக் குடும்பத்திற்கு 1 லட்சம் வழங்கிய சத்யராஜ்

April 2, 2017 தண்டோரா குழு

கோவையில் கொலை செய்யப்பட்ட திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் குடும்பத்திற்கு நடிகர் சத்யராஜ் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பாரூக்(31). திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்தவரான இவர், கடந்த மாதம் 16ம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொடூர முறையில் கொல்லப்பட்டார்.

இவ்வழக்கில், அன்சாத், சதாம் உசேன் உள்ளிட்ட 6 பேர், தாங்கள்தான் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் பாரூக் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வந்ததாகவும், அதனால் ஆத்திரமுற்று அவரை கொலை செய்ததாகவும், கொலையாளிகள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இந்நிலையில், கொல்லப்பட்ட பாரூக் குடும்பத்திற்கு, பெரியாரின் தொண்டராக அறியப்படும் நடிகர் சத்யராஜ் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க