• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முடிந்தது ஜியோ இலவசசேவை வருத்தத்தில் வாடிக்கையாளர்கள்

March 31, 2017 தண்டோரா குழு

கடந்த ஆறு மாதமாக இலவச சேவைகளை வழங்கி வந்த ஜியோவின் சலுகை, இன்றுடன் முடிவடைவதால் வாடிக்கையாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

தொலைத்தொடர்பு துறையில் கால்பதித்து பெரும் புரட்சியையே முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இலவச சேவை அறிவிப்புகளால் மிக குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஈர்த்தது. இலவச சேவைகளால்சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ள ஜியோவின் இலவச டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைகின்றன.

இதன் பிறகு ஜியோ தொலைபேசி எண்ணை பயன்படுத்த வேண்டுமானால், உறுப்பினர் கட்டணமாக 99 ரூபாய் செலுத்தி,ஜியோ பிரைம் எனும் திட்டத்தில் சேர வேண்டும்.ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தால் இலவச சேவைகளைக் குறைந்த செலவில் பெறலாம் எனவும் எந்த ரீசார்ஜும் செய்யவில்லை என்றால் சுமார் 90 நாட்களுக்குள் ஜியோ சிம் செயலிழந்துவிடும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும், இதுவரை ஜியோ பயனர்களில் 30 சதவிகிதத்தினர் மட்டுமே ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இன்றைக்குள் 99 ரூபாய் செலுத்தி ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட இருப்பதாகஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலில் கடந்த டிசம்பர் வரை அறிவிக்கப்பட்டிருந்த இலவச சேவைகள், மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக் காரணமாக, இன்றுவரை (மார்ச் 31) நீட்டிக்கப்பட்டிருந்தது. அதைபோல் இலவச சேவையை இன்னும் நீட்டிப்பார்கள் என்று வாடிக்கையாளர்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், கடைசி அவரை அப்படி எந்த அறிவிப்பும் வராததால் வாடிக்கையாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

மேலும் படிக்க