• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லிப்டுடன் ரெடியானது பா.ஜ க பிரச்சார வேன்.

April 21, 2016 முகமது ஆசிக்

தமிழக பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரத்திற்காக கோவையில் தயாரான அதிநவீன சொகுசு வேன் இன்று சென்னைக்கு கட்சி நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளைத் துவங்க உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோரும் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது வரை தங்கள் சுற்றுப்பயணத்தை துவங்காதவர்கள் தமிழக பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராசன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மட்டுமே.

இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் டெல்லியில் இருந்து வரும் தலைவர்கள் தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளார். இதையடுத்து தமிழிசைக்காகவும் டெல்லியில் இருந்து வரும் தலைவர்களுக்காகவும் அதிநவீன வசதிகள் கொண்ட பிரச்சார வேன் ஒன்று கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தயாரானது.

அந்த வாகனத்தை இன்று கோவையில் உள்ள பாஜக நிர்வாகிகள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கமாக ஜெயலலிதா, கருணாநிதியின் வாகனங்கள் அதிநவீன வசதிகளுடன் கூடியதாக இருக்கும் இம்முறை தமிழிசையின் வாகனமும் அவ்வாறு தயாராகியுள்ளது.

வாகனத்தில் உள்ள வசதிகள்.

ஒரு ரோலிங் சேர், படுக்கை, நவீன கழிப்பிடம் போன்ற வசதிகளுடன், குளிர்சாதன வசதி, அதிநவீன சஸ்பென்சன் வசதிகள் என பல்வேறு நவீன வசதிகளுடன் இந்தப் பிரச்சார வாகனம் தயாராகியுள்ளது.

மேலும், வாகனத்தில் நடுவே உள்ள மேடை மீது நின்று சுவிட்ஸ் போட்டால் லிப்ட் மூலம் மேலே வந்து மேற்கூரை வழியாகப் பேசும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு அடுத்து பிரச்சார வாகனத்தில் மேடைக்கு லிப்ட் வைத்து அமைப்பட்டது பா.ஜ.க விற்கு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க