March 31, 2017
தண்டோரா குழு
மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தார்.
பின்னர் நடிகர் ரஜினி போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மலேசியாவில் கபாலி படப்பிடிப்பு சென்றிருந்த போது மலேசிய அரசு செய்த உதவி மிகப்பெரியது.
அங்கயே பிரதமரை பார்த்து நன்றி சொல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் முடியவில்லை.அவர் இங்க வந்ததால் அவருக்கு அழைப்பு விடுத்தேன்.
என் அழைப்பை ஏற்று அவர் வந்தார்.
அவர் அங்குள்ள தமிழக மக்களுக்கு நிறைய உதவி செய்து வருகிறார். அது தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டேன் என்றார்.
மேலும், இலங்கைப்பயணம் குறித்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளேன். மலேசிய தூதராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும்
அரசியல் துளி அளவும் இல்லை என்றும் கூறினார்.