• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக எமி ஜாக்சன் பிரசாரம்?

March 30, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் தொகுதியில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, நடிகை எமி ஜாக்சன் பிரசாரம் செய்ய உள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ம் தேதி நடைபெற வுள்ளது. இதில்,அ.தி.மு.க., – சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிடுகிறார். அவருக்கு, தொகுதியில் கடும்எதிர்ப்பு கிளம்பிவருகிறது. ஏனெனில், ஓபிஎஸ் அணி, ஜெ.அண்ணன் மகள் தீபா, திமுக என இம்முறை இடைத்தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதையடுத்து, தினகரன் ஆதரவாளர்கள்பல வழிகளில், வாக்காளர்களை கவர நினைக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, தினகரனுக்கு ஆதரவாக, சினிமா நட்சத்திரத்தை களமிறக்க முடிவு செய்துள்ளனர். அந்தவகையில், இங்கிலாந்தில் பிறந்து, லண்டனில் மாடல் அழகியாக பணிபுரிந்த, நடிகை எமி ஜாக்சனை அழைத்து வந்து, தினகரனுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்ய வைக்க திட்டமிட்டு கூறப்படுகிறது.

மதராசபட்டணம் திரைப்படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் அப்படத்தில், ஆங்கிலேய பெண்மணியாக, தொப்பி அணிந்து நடித்துள்ளார். அந்த படத்தில், எமி அணிந்திருந்த தொப்பிகள், விதவிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனால், அந்த தொப்பிகள், மக்களிடையே மிகவும் பேசப்பட்டது.

அதை கருத்தில் கொண்டு, சிங்கப்பூரில் உள்ள, தினகரனின் நண்பர் மூலமாக, எமி ஜாக்சனை, பிரசாரத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க